2580.கரக்க வந்த காம நோய்
துரக்க வந்த தோமினால்
இரக்கம் இன்றி ஏவினான்
அரக்கன் மைந்தன் ஆயினேன்

    கரக்க வந்த காம நோய் துரக்க வந்த தோமினால் - அறிவை
மறைக்க வந்த காமமாம் பிணி தொடர்தலால் உண்டான குற்றத்தால்; இரக்க
மின்றி ஏவினான் -
கருணையின்றி அரக்கனாகும்படி சபித்தார். (ஆதலால்);
அரக்கன் மைந்தன்ஆயினேன் - இராக்கத குலத்தில் பிறந்த மகன்
ஆனேன்.

     தான் அடைந்த இடத்தை மேலும் வருத்துதலால் காமத்தை நோய்
என்றார் சாபம் கொடுத்ததுகுபேரனாம். தோம் - குற்றம்.             64