2581.அன்ன சாபம் மேவி நான்
"இன்னல் தீர்வது ஏது" எனா
"நின்ன தாளின் நீங்கும்" என்று
உன்னும் எற்கு உணர்த்தினான்

    நான் அன்ன சாபம் மேவி- நான் அச்சாபத்தை அடைந்து; இன்னல்
தீர்வது ஏது எனா -
இத்துன்பமாம் சாபம் எனக்குத்தீர்வது எவ்வாறு என
நான் கேட்க; நின்ன தாளின் நீங்கும் என்று - உன்னுடைய திருவடிபடும்
அளவில் இச்சாபம் என்னை விட்டு நீங்கும் என்று; உன்னும் எற்கு
உணர்த்தினான் -
ஆராய்ந்து நோக்கும் எனக்குத் (குபேரன்) தெரிவித்தான்.

     எற்கு - எனக்கு, அசுரச்சாரியை இன்றிவந்தது.                  65