2582. | அன்று மூலம் ஆதியாய்! இன்றுகாறும் ஏழையேன் நன்று தீது நாடலேன்; தின்று தீய தேடினேன். |
ஆதியாய்! - முதற் பொருளே!; அன்று மூலம் இன்று காறும் - அன்று முதல் இன்று வரை; ஏழையேன் நன்றுதீது நாடலேன் - அறிவில்லாத நான் நல்லது கெட்டதை ஆராயவில்லை; தின்று தீய தேடினேன்- உயிர்களைக் கொன்று உண்டு தீவினையைத் தேடிக் கொண்டேன். காம நோயால் அறிவிழந்து, உயிர்க் கொலை புரிந்து தீயவற்றைத் தேடிக்கொண்டான். 66 |