2584. | திறத்தின் வந்த தீது எலாம் அறுத்த உன்னை ஆதனேன் ஒறுத்த தன்மை ஊழியாய்! பொறுத்தி! என்று போயினான் |
ஊழியாய்! - ஊழிக்காலத்தும் அழியாது நிற்பவனே!; திறத்தின் வந்த தீது எலாம் அறுத்த உன்னை - என் வினை ஆற்றலுக்கு ஏற்ப வந்த தீவினைகளை அழித்த உன்னை; ஆதனேன் - மூடனாகியநான்; ஒறுத்த தன்மை பொறுத்தி- பகைத்துச் செய்த தீமைகளைப் பொறுத்தருள்க; என்று போயினான் - என்று சொல்லி (விராதன் தன் பழைய கந்தருவ வடிவில் தும்புரு என்றபெயருடன்) வானுலகு சென்றான். தீதெலாம் - ஒருமை, பன்மை மயக்கம். 68 |