இராமன் முதலியோர் முனிவர் வாழும் சோலையை அடைதல் 2585. | 'தேவு காதல் சீரியோன் ஆவி போயினான்' எனா, பூ உலாவு பூவையோடு ஏ வலாரும் ஏகினார் |
தேவு காதல் சீரியோன் ஆவி போயினான் எனா - தேவரும் விரும்பத்தக்க சிறப்புள்ள விராதன் உயிர் நீங்கினான் என்று; பூ உலாவு பூவையோடுஏவலாரும் ஏகினார் - தாமரைப் பூவில் வாழும் திருமகளாம் சீதையுடன், அம்புப் போர் செய்யவல்ல இராமலக்குவர் அவ்விடம் விட்டுச் சென்றார். பூ உலாவு பூவை - தாமரை மலரில் வாழும் திருமகள். பூ - அழகு, பொலிவுமாம். பூவை -நாகணவாய்ப் பறவை போன்ற சீதை; விராதன் செயலால் அஞ்சிப் பொலிவிழந்த சீதை அவன்அழிந்ததும் மீண்டும் பொலிவுற்றாள். ஏவலார் - எல்லா உலகங்களையும் அடிமையாகக் கொண்டு ஆணைசெலுத்த வல்லவர் என்றுமாம். 69 |