2589. | அன்னச் செலவின், படிமேல், அயல் சூழ் பொன்னின் பொலி வார் அணி பூண் ஒளிமேல் மின்னின் செறி கற்றை விரிந்தன போல், பின்னிச் சுடரும், பிறழ், பேர் ஒளியான் |
படிமேல் - தரை மீது; அயல் சூழ் - அருகிலுள்ள இடங்களில் சுற்றிலுமுள்ள;அன்னச் செலவின் - அன்னம் போன்ற நடையுடைய; பொன்னின் பொலிவார் அணிபூண்ஒளிமேல் - திருமகள் போல் விளங்கும் தெய்வப் பெண்கள் அணிந்த நகைகளின் ஒளியின்மேல்; மின்னல் செறி கற்றை விரிந்தன போல் - மின்னல்களின் மிகுந்த கூட்டம்பரவியது போல்; பின்னிச் சுடரும் - கலந்து விளங்கும்; பிறழ் பேர் ஒளியான் -மிகுந்த சிறந்த ஒளி உடையவன் (இந்திரன்). செலவு - நடை, பொன் - தேமலுமாம். மின்னலின் செறி கற்றை என்பது தெய்வப் பெண்களின்கூட்டத்திற்கு உவமை. இந்திரன் கருநிற முடையவன். ஆதலால் அவனை மேகத்திற்கு உள்ளுறையாகக் கொள்ளலுமாம். (2597) 3 |