259.'அவன் வலி படைத்து,
     மற்று அரக்கர் யாவரும்,
சிவன் முதல் மூவரை,
     தேவர் சித்தரை,
புவனியின் முனிவரை,
     மற்றும் புங்கவர்
எவரையும் துரந்தனர் -
     இறைவ! - இன்னுமே.

    புங்கவர் - உயர்ந்தோர்.                               14-3