2595.தேரில் திரி செங் கதிர்
     தங்குவது ஓர்
ஊர் உற்றது எனப் பொலி
     ஒண் முடியான்;
போர் வித்தகன்; நேமி
     பொறுத்தவன் மா
மார்வில் திருவின் பொலி
     மாலையினான்;

    தேரில் திரி செங்கதிர் தங்குவது - (ஒற்றைச் சக்கரமுள்ள தன்)
தேரில் ஏறிச் செல்லும் சிவந்த கதிர்களுடைய சூரியன் தங்குவதான;ஓர்
ஊர் உற்றது என -
ஒரு பரிவேடம் இதுவாம் எனும்படி அமைந்த; பொலி
ஒண் முடியான்-
விளங்கும் ஒளிமிக்க கிரீடத்தை உடையவன்; போர்
வித்தகன் -
போர்செய்வதில் சிறந்தவன்; நேமி பொறுத்தவன் மா
மார்வில் திருவின் -
சக்கரப்படைஏந்திய திருமாலின் பெருமை மிக்க
மார்பில் வாழும் திருமகளைப் போல; பொலி மாலையினான்- விளங்கும்
மாலை அணிந்தவன் (இந்திரன்).

     தேரொளிக்குப் பரி வேடமும், கிரீடத்திற்குச் சூரியனும் உவமை ஆம்.
நேமி பொறுத்தவன்என இந்திரனையும் குறிக்கும் என்பர். ஏன் எனில்
அவனுக்குச் சக்கிரி, நேமி என்ற பெயர்கள்உள்ளன. இந்திரன் மார்பின்
மாலைக்குத் திருமால் மார்பில் திருமகள் உவமை. மார்வு -மார்பு.       9