2596. | செற்றி, கதிரின் பொலி செம் மணியின் கற்றைச் சுடர் விட்டு எரி கஞ்சுகியான்; வெற்றித் திருவின் குளிர் வெண் நகைபோல் சுற்றிக் கிளரும் சுடர் தோள் வளையான்; |
செற்றி கதிரின் பொலி - பதிக்கப் பெற்றுக் கிரணங்களால் ஒளி வீசி நிற்கும்; செம்மணியின் சுடர்க்கற்றை - சிவந்த மாணிக்கங்களின் ஒளியின் தொகுதி;விட்டு எரி கஞ்சுகியான் - வெளி விட்டு ஒளி வீசும் மேல் அங்கி உடையான்; வெற்றித் திருவின் குளிர் வெண் நகை போல் - விசயலக்குமியின் குளிர்ந்த வெண்பற்களின்சிரிப்புப் போல்; சுற்றிக் கிளரும் சுடர்தோள் வளையான் - சுற்றி விளங்குகின்ற ஒளிவீசும் தோள் வளையங்களை உடையவன் (இந்திரன்). செற்றி - ஒளி பெறச் செதுக்கி என்பர். சிலர் தோள் வளைகளை வெண்ணகைக்குஉவமையாக்கியதால் அவ்வணி முத்துக்கள் பதித்தவை எனலாம். தோள்வளையம் - வாகுவலயம் எனும்அணி. கஞ்சுகி - கவசம் என்பாருமுளர். 10 |