சரபங்கன் இந்திரனை வரவேற்று வினவல்

2600.நின்றான், எதிர்நின்ற
     நெடுந் தவனும்
சென்றான், எதிர்கொண்டு;
     சிறப்பு அமையா,
'என்தான் இவண்
     எய்தியவாறு?' எனலும்,
பொன்றாத பொலங் கழ
     லோன் புகலும்;

    நின்றான் - (இந்திரன் அச் சரபங்கர் ஆசிரமத்தில்) சென்று நின்றான்;
எதிர் நின்ற நெடுந்தவனும்எதிர் கொண்டு சென்றான் - அங்கு அவன்
எதிரில் நின்ற பெருந்தவம் செய்தவனாகியசரபங்கனும் எதிர் வந்து
அழைத்துச் சென்றான்; சிறப்பு அமையா - வந்த அதிதிக்குரியஉபசாரங்கள்
செய்து; 'இவண் எய்தியவாறு என்' எனலும் - இங்கு நீ வந்த காரணம்
யாது' எனக் கேட்டலும்; பொன்றாத பொலங் கழலோன் புகலும்- கெடாத
பொற்கழல் அணிந்தஇந்திரன் பின்வருமாறு கூறினான்; தான் - அசை.

     நின்ற நெடுந்தவன் என்பதற்கு நிலைபெற்று நெடிய தவம் செய்த
சரபங்க முனிவன் எனலுமாம்.இந்திரன் பெற்ற பல வெற்றிகளைக் குறிக்கும்
பொலங்கழல் அணிந்த நிலை.                                   14