2611.காணா, மனம் நொந்து
     கவன்றனனால்,
ஆண் நாதனை, அந்தணர்
     நாயகனை,
நாள் நாளும் வணங்கிய
     நன் முடியால்,
தூண் ஆகிய தோள்கொடு,
     அவன்-தொழுவான்,

    காணா - (அங்கு இந்திரன் இராமனைப்) பார்த்து; மனம் நொந்து
கவன்றனன் -
மனம் நோயுற்றுக்கவலை கொண்டான் ஆக; ஆண்
நாதனை -
ஆண்களின் தலைவனை (புருஷோத்தமனை); அந்தணர்
நாயகனை -
அந்தணராம் முனிவர்க்குத் தலைவனாம் இராமனை; நாள்
நாளும் வணங்கிய நன்முடியால் -
நாள் தோறும் தொழுகின்ற தன்
மேலான சிரத்தால்; தூண் ஆகிய தோள் கொடுஅவன் தொழுவான் -
தூண் போன்ற தன் புயங்கள் பட இராமனின் திருவடிகளை இந்திரன்
வணங்குவான்; ஆல் - அசை.

     கண்டு மனம் நொந்து கவன்றனன் என்பதால் பரமபத வாழ்வை விட்டுத்
தனக்காக மனிதவடிவெடுத்ததுடனன்றிக் காடுகளில் கால் நோவ வருந்தி
இராமன் திரிதலைக் கண்ட நிலையைஅறியலாம். இராமன் திருவடிகளில்
இந்திரன் தலையும் தோளும் படத் தொழுதான் என்பதால் மார்புகால்
முதலிய பிற உறுப்புகளாலும் வணங்கினான் என அறியலாம். இது
உபலட்சணம்.                                                  25