2628. | 'ஆதலின், இது பெற அருள்' என உரையா, காதலி அவளொடு கதழ் எரி முழுகி, போதலை மருவினன், ஒரு நெறி-புகலா வேதமும் அறிவு அரு மிகு பொருள் உணர்வோன். |
ஒரு நெறி புகலா வேதமும் -ஓர் உறுதி வழி எனக் கூறாத வேதமும்; அறிவு அரு மிகு பொருள் உணர்வோன் - வேதங்களும்பரம்பொருளை அறிய முடியாத மேம்பட்ட அப்பொருளின் நிலையை அறிந்த சரபங்கர்; ஆதலின் இதுபெற அருள் என உரையா - ஆகையால் இந்தப் பரமபதம் அடைவதை எனக்கு அருள்க என்று இராமனிடம்சொல்லி; காதலி அவளொடு - தம் மனைவியோடும்; கதழ் எரி முழுகி போதலை மருவினன் - பற்றி எரியும் பெரியநெருப்பில் புகுந்து பரமபதம் சேர்ந்தான். மிகு பொருள் - பரம்பொருளாகிய இராமன் எனலுமாம். கதழ் - மிகுதி, வலிமை. உரையா -செய்யா எனும் வாய்பாட்டு எச்சம். 42 |