2648.'வேந்தன் வீயவும்,
     யாய் துயர் மேவவும்,
ஏந்தல் எம்பி வருந்தவும்,
     என் நகர்
மாந்தர் வன் துயர்
     கூரவும், யான் வனம்
போந்தது, என்னுடைப்
     புண்ணியத்தால்' என்றான்

    வேந்தன் வீயவும் - சக்ரவர்த்தியாம் தயரதன் இறப்பவும்; யாய் துயர்
மேவவும் -
தாயாம் கௌசலை துன்பம்அடையவும்; ஏந்தல் எம்பி
வருந்தவும் -
பெருமை உடைய என் தம்பி பரதன் வருத்தமடையவும்;என்
நகர் மாந்தர் வன்துயர் கூரவும் -
எனது (அயோத்தி) நகரத்தில் உள்ள
மக்கள்வலிய துன்பத்தைப் பெரிதும் அடையவும்; யான் வனம் போந்தது
என்னுடைப் புண்ணியத்தால்என்றான் -
நான் காட்டிற்குப் புறப்பட்டு
வந்தது என்னுடைய நல்வினையாலாகும் என்றுகூறினான்.

     மகனைப் பிரிந்த துன்பத்தால் தயரதன் இறந்தான். அண்ணனைப்
பிரிந்த துன்பத்தால்பரதன் வருந்தினான். அயோத்தி மக்கள் பட்ட
துயரத்தை அயோத்தியா காண்டத்தில் நகர் நீங்குபடலம் கூறும் (1766-1817).
முனிவர்களின் பகைதீர்த்து உதவி செய்யப் பெறுவதால் 'போந்தது
என்னுடைப் புண்ணியத்தால்' என இராமன் கூறினான்.

     யாய் - ஆய் என்பதன் போலி, ஏந்தல் - உயர் குணங்களை
ஏந்தியவன், உயர்ச்சி,பெருமையும் ஆம்.                           18