4. சடாயு காண் படலம் 265. | 'தக்கன் நனி வயிற்றுஉதித்தார் ஐம்பதின்மர் தடங் கொங்கைத் தையலாருள், தொக்க பதின்மூவரை அக் காசிபனும் புணர்ந்தனன்; அத்தோகைமாருள், மிக்க அதிதிப் பெயராள் முப்பத்து முக் கோடி விண்ணோர் ஈன்றாள்; மைக் கருங் கண் திதி என்பாள் அதின் இரட்டி அசுரர்தமை வயிறு வாய்த்தாள். |
ஐம்பதின்மர் - ஐம்பது பேர்; விண்ணோர் - தேவர்கள்; இரட்டி - இரண்டு மடங்கு. 24-1 |