2651. 'ஆவுக்கு ஆயினும்
     அந்தணர்க்கு ஆயினும்,
யாவர்க்கு ஆயினும்,
     எளியவர்க்கு ஆயினும்,
சாவப்பெற்றவரே, தகை
     வான் உறை
தேவர்க்கும் தொழும்
     தேவர்கள் ஆகுவார்.

    ஆவுக்கு ஆயினும் - பசுக்களைக் காப்பதற்கானாலும்; அந்தணர்க்கு
ஆயினும் -
அந்தணர்களைக்காப்பதற்கானாலும்; எளியவர்க்கு ஆயினும்-
ஏழைகளைக் காப்பதற்கானாலும்; யாவர்க்கு ஆயினும் - எவர்களைக்
காப்பதற்கானாலும்; சாவப் பெற்றவரே - உதவிசெய்து அதனால் இறக்கப்
பெற்றவர்களே; தகை வான் உறை தேவர்க்கும் தொழும் தேவர்கள்
ஆகுவார் -
பெருமை பொருந்திய விண்ணுலகில் வாழும் தேவர்களுக்கும்
தொழுது வணங்கக்கூடியதேவர்களாக ஆவர்.

     ஆ - பசு இது எல்லா உயிரினங்களிலும் புனிதமும் பயன் தருவதும்
ஆதலால் எல்லாவற்றிலும் முன்வைக்கப் பெற்றது. "விடுநில மருங்கின்
மக்கட்கெல்லாம், பிறந்த நாட் டொட்டுஞ் சிறந்ததன்தீம்பால், அறந்தரு
நெஞ்சோடருள் சுரந் தூட்டும்" (மணிமே. ஆபுத்திரன் 51 - 54) என்பர்.
ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் என்று புறநானுறும் (9) குறிக்கும்
அடியோடு இதனை ஒப்பிட்டுக்காணத்தக்கது. எளியர் - மெல்லியர் என்ற
பொருளில் பெண்டிரையும் குறிக்கும். இத்தகையோர்க்குஉதவி செய்வதால்
இறந்தோர் தேவர்க்குள்ளும் சிறந்த தேவராவர். இப்படலத்தை அடுத்துச்
சடாயுகாண்படலம் வருவதும் இப் பாடலின் பொருட் சிறப்பை எண்ணிப்
பார்க்க இடம் தருகிறது. ஆயினும்என்பது எண்ணிடைச் சொல்.        21