266. தானவரே முதலோரைத் தனு பயந்தாள்;
     மதி என்பாள் மனிதர்தம்மோடு-
ஆன வருணங்கள் அவயவத்து அடைவே
     பயந்தனளால்; சுரபி என்பாள்
தேனுவுடன் கந்தருவம் மற்று உள்ள
     பிற பயந்தாள்; தெரிக்குங்காலை,
மானமுடைக் குரோதவசை கழுதை, மரை,
     ஒட்டை, பிற, வயிறு வாய்த்தாள்.

    தானவர் - அரக்கர்; வயிறு வாய்த்தாள் - கர்ப்பம் உற்றாள்.  24-2