267. | மழை புரை பூங் குழல் விநதை, வான், இடி, மின், அருணனுடன் வயிநதேயன், தழை புரையும் சிறைக் கூகை, பாறு முதல் பெரும் பறவைதம்மை ஈன்றாள்; இழை புரையும் தாம்பிரை ஊர்க்குருவி, சிவல், காடை, பல பிறவும் ஈன்றாள்; கழைஎனும் அக்கொடிபயந்தாள், கொடியுடனே செடி முதலாக் கண்ட எல்லாம். |
மழை புரை பூங்குழல் - மேகம் போன்ற பொலிவு பெற்ற கூந்தல்; கூகை - ஆந்தை; இழை புரையும் தாம்பிரை - (மகளிர்க்கு) ஆபரணம் போன்ற தாம்பிரை என்னும் பெயருடையால். 24-3 |