5. சூர்ப்பணகைப் படலம்

271. கண்டு தன்இரு வழி
     களிப்ப, கா....கத்து
எண் தரும் புளகிதம்
     எழுப்ப, ஏதிலாள்
கொண்ட தீவினைத் திறக்
     குறிப்பை ஓர்கிலாள்
அண்டர் நாதனை, 'இவன்
     ஆர்?' என்று உன்னுவாள்.

     எண்தரும் புளகிதம் - எண்ணத்தக்க புளகம் (மெய்ச் சிலிர்ப்பு);
அண்டர் நாதன் - தேவர்க்குத் தலைவனாகிய இராமபிரான்; ஓர்
கிலாள் -
குறிப்பாக உணராதவளாய்.                              11-1