272. | பொன்னொடு மணிக் கலை சிலம்பொடு புலம்ப, மின்னொடு மணிக்கலைகள் விம்மி இடை நோவ, துன்னு குழல் வன் - கவரி தோகை பணிமாற, அன்னம் என, அல்ல என, ஆம் என, நடந்தாள். |
பொன்னொடு மணிக் கலை - பொன்னும் மணியும் சேர்த்துச் செய்யப்பட்ட மணிமேகலாபரணம்; புலம்ப - ஒலிக்க. 33-1 |