6. கரன் வதைப் படலம் 273. | ஆற்றேன் ஆற்றேன், அது கெட்டேன்; அறுத்தான் அறுத்தான் என் மூக்கை; கூற்றே கூற்றே என் உடலை, குலையும் குலையும்; அது கண்டீர்; காற்றே தீயே எனத் திரியும் கரனே! கரனுக்கு இளையோரே! தோற்றேன் தோற்றேன்; வல்லபங்கள் எல்லா வகையும் தோற்றேனே. |
ஆற்றேன் - தாங்க மாட்டேன்; வல்லபங்கள் - வெற்றிகள். 7-1 |