274.பத்துடன் ஆறு எனப்
     பகுத்த ஆயிரம்
வித்தக வரத்தர்கள்
     வீர வேள்வியில்
முத் தலைக் குரிசிலுக்கு
    அன்று முக்கணான்
அத்துணைப் படைத்து
     அவன் அருள உற்றுளார்.

    வித்தக வரத்தர் - சதுரப்பாடு விளங்கும் வரம் பெற்றவர்கள்;
முத்தலைக் குரிசில் - திரிசிரா என்னும் அரக்கர் தலைவன்.   35-1