275.ஆறு நூறாயிரம் கோடி
     ஆழித் தேர்,
கூறிய அவற்றினுக்கு
     இரட்டி குஞ்சரம்,
ஏறிய பரி அவற்று இரட்டி,
     வெள்ளம் நூறு
ஈறு இல் ஆள், கரன்
     படைத் தொகுதி என்பரால்.

    ஆழித் தேர் - சக்கரம் கொண்ட தேர்கள்; குஞ்சரம் -யானை. 38-1