7. சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்

278. பரிக்கும் அண்டப் பரப்பு எவைக்கும் தனியரசு
     என்று அரன்கொடுத்த வரத்தின் பான்மை
உரைக்கு உவமை பெற, குலிசத்தவன் முதலாம்
     உலகு இறைமைக்கு உரிய மேலோர்
இருக்கும் அரித் தவிசு எவைக்கும் நாயகம்
     ஈதுஎனக் குறித்து அங்குஇமையோர் தச்சன்
அருக்கர் வெயில்பறித்து அமைத்தஅரிமுகத்தின்
     மணிப் பீடத்து அமர்ந்தான் மன்னோ.

    பரிக்கும் - ஈர்க்கும் (அண்டத்தின் கோளங்கள்
ஒன்றையொன்று ஈர்ப்பன); குலிசத்தவன் - வச்சிராயுதம் ஏந்தும்
இந்திரன்; அரித் தவிசு - சிங்க ஆசனம்; நாயகம் - தலைமை;
இமையோர் தச்சன் - மயன்; அருக்கர் - சூரியர்கள்; அரிமுகத்தின்
மணிப் பீடம் -
சிங்க முகம் அமைத்து மணிகள் பதித்த (அழகிய)
பீடம்.                                                    2-1