279. | பொருப்பினையும் கடந்த புயப் பரப்பினிடைப் பொழி கதிரின் ஒளி குலாவி, பரப்பும் இருட் குறும்பு எறிந்த பகல் ஒளியும் கெடத் துரந்து, பருவ மேகத்து உருப் பயில் இந்திர நீலச் சோதி தளைத்து உலகம் எலாம் உவந்து நோக்க, திருப் பயில் உத்தரிகமொடு செறி வாகுவலய நிரை திகழ மன்னோ. |
பொருப்பு - மலை; துரந்து - விரட்டி; உரு - நிறம், அழகு; உத்தரிகம் - மேலாடை; வாகு - தோள். 5-1 |