280. இலங்கு மரகதப் பொருப்பின் மருங்கு தவழ்
     இளங் கதிரின் வெயில் சூழ்ந்தென்ன,
அலங்கு செம் பொன் இழைப் பயிலும்
     அருந்துகிலின் பொலிந்தஅரைத் தலத்தின்மீது,
நலம் கொள் சுடர்த் தொகை பரப்பும்
     நவமணிப்பத்தியின் இழைத்தநலம் ஆர்கச்சு
துலங்க அசைத்து அதில் சுரிகையுடை வடி
     வாள் மருங்கினிடைத் தொடர மன்னோ.

    வெயில் - ஒளி; வடி - கூர்மை.                         5-2