281. | வானுலகு அளிக்கும் புரந்தரன் ஆதி, மருவும் எண் திசைப் படு நிருபர் ஆனவர்தமது புகழ் எலாம் ஒருங்கே அன்ன மென் புள் உருத் தாங்கி, தான் இடைவிடாது தசமுகத்து அரக்கன் பதத்து இடைத் தாழ்ந்து தாழ்ந்து எழல்போல் பால் நிறக் கவரி மயிர்க் குலம் கோடி பாங்கினில் பயின்றிட மன்னோ. |
அளிக்கும் - காக்கின்ற; புரந்தரன் - இந்திரன்; கவரி மயிர்க் குலம் - வெண்சாமரைக் கூட்டம்; பாங்கினில் - பக்கங்களில். 5-3 |