282.தேவ கன்னியர்கள், இயக்கர் தம் குலத்துத்
     தெரிவையர், சித்தர் மங்கையர்கள்,
மேவ அருந் திறல் சேர் நாகர் மெல்லியர்கள்,
     விளங்கு கந்திருவர், மேல் விஞ்சைக்
காவலர் குலத்தில் தோன்று கன்னியர்கள்,
     ஆதியாய்க் கணிப்பு இல் பல் கோடிப்
பாவையர் எவரும் பாங்குற நெருங்கி,
     பலாண்டு இசை பரவிட மன்னோ.

    கணிப்பில் - கணக்கற்ற; பலாண்டு - பல்லாண்டு.            5-4