283. தண் கதிர் பொழியும்
     ஓர் தவள மா மதி
விண் பிரிந்து இரு
     நிலத்து இருந்து, வேறு வேறு
எண் கடந்து உரு
     எடுத்து இருளை ஓட்டல்போல்
வெண் குடைத் தொகை
     பல கோடி மேவவே.

    தவள மா மதி - வெள்ளையாயுள்ள பெருமைக்குரிய சந்திரன்.  7-1