284. ஏவலின் புரி தொழில்
     எவையும் செய்து, செய்து 
ஓவு இலர், துயர்க் கடற்கு
     ஒழிவு காண்கிலர்,
மேவரும் பெரும் பயம்
     பிடித்து, விண்ணவர்
தாவினர், தலைத் தலை
     தாழ்ந்து நிற்கவே.

    ஓவு இலர் - நீங்குதல் இலராய் (ஓய்வு ஒழிச்சல் இல்லாமல்);
ஒழிவு - முடிவு.                                          7-2