287.கடி நகர் அழித்துத்
     தன் காவல் மாற்றிய
கொடியவன் தனக்கு உளம்
     குலைந்து கூசியே,
வடதிசைப் பரப்பினுக்கு
     இறைவன் மா நெதி
இடு திறை அளந்தனன்,
     இரந்து நிற்கவே.

     கடிநகர் - காவல் மிக்க நகரம்; மாற்றிய- நீக்கிய; நெதி-நிதி. 15-1