2905.ஆளிகள் பூண்டன,
     அரிகள் பூண்டன,
மீளிகள் பூண்டன,
     வேங்கை பூண்டன,
ஞாளிகள் பூண்டன,
     நரிகள் பூண்டன,
கூளிகள் பூண்டன,
     குதிரை பூண்டன,

    ஆளிகள் பூண்டன - யாளிகள் பூட்டப் பட்டவையும்; அரிகள்
பூண்டன -
சிங்கங்கள் பூட்டப்பட்டவையும்; மீளிகள் பூண்டன - பேய்கள்
பூட்டப்பட்டவையும்; வேங்கை பூண்டன - புலிகள் பூட்டப் பட்டவையும்;
ஞாளிகள் பூண்டன - நாய்கள் பூட்டப் பட்டவையும்; நரிகள் பூண்டன -
நரிகள் பூட்டப் பட்டவையும்; கூளிகள் பூண்டன - பூதங்கள் பூட்டப்
பட்டவையும்; குதிரை பூண்டன - குதிரைகள் பூட்டப்பட்டவையும் (ஆகிய)

     ஆளி (யாளி) மரூஉமொழி - துதிக்கையுடையதும், யானையைக்
கொல்வதும், சிங்கம் போல்வதுமான ஒரு மிருகம். சொற்பொருள்
பின்வருநிலையணி. கூளி - பூதம் : குறுகிப் பருத்த உருவமுடையது.     31