292. என்பதை மனக்கொடு
     இடர் ஏறிய கருத்தாள்,
முன்ப! உன் முகத்தின்
     எதிர் பொய் மொழியகில்லேன்;
நின் பதம்; நின் ஆணை
     இது; நீ கருதுவாய் என்று
அன்பின் உரியோர் நிலை
     எடுத்து அறைசெய்கிற்பாள்.

    மனக்கொடு - மனத்தில் கொண்டு (எண்ணி); முன்ப - வலிமை
உடையவனே.                                           51-1