293.'ஈது அவர்கள்தங்கள் செயல்'
     என்று அவள் உரைப்ப,
கோது உறு மனத்து எரி
     பிறந்து, குறை நாளில்
மோது வடவைக் கனல்
     முகந்து, உலகம் எல்லாம்
காதுறு சினததன்
     இதனைக் கழறுகின்றான்.

    காதுறு சினத்தன் - சிதைக்கும் சினம் உடையவனாய்.    57-1