294. இற்று எலாம் அரக்கி ஆங்கே
     எடுத்து அவள் இயம்பக் கேட்ட
கொற்ற வாள் அரக்கன் முன்னே,
     கொண்ட வெங் கோபத் தீயில்
சொற்ற ஆதரத்தின் வாய்மை
     எனும் புனல் சொரிதலோடும்
அற்றதால; பின்பு ஆங்கு
     அன்னோன் கருத்தும்வேறாயது அன்றே.

    கொற்றவாள் அரக்கன் - வெற்றி தரும் வாள் ஏந்திய
அரக்கன் (இராவணன்); ஆதரம் - அன்பு, பற்று.                 81-1