8. மாரீசன் வதைப் படலம் 295. | ஆயிரம் அடல் கையுடையானை மழு வாளால் 'ஏ' எனும் உரைக்குள் உயிர் செற்ற எதிர் இல்லோன் மேய விறல் முற்றும் வரி வெஞ் சிலையினோடும் தாயவன் வலித் தகைமை யாம் உறு தகைத்தோ. |
ஆயிரம் அடல் கையுடையான் - ஆயிரம் வெற்றிக் கைகளை உடைய கார்த்தவீரியன்; எதிர் இல்லோன் - ஈடு இல்லாதவன் (வாலி); தாயவன் - கடந்தவன் (இராமன்). 25-1 |