9. இராவணன் சூழ்ச்சிப் படலம் 296. | ஓவரு கவனம்மீது உற்றுச் சென்றுளான், பூ வரு சாலையுள் பொருந்த நோக்குறா, 'யாவர், இவ் இருக்கையுள் இருந்த நீர்?' என்றான் - தேவரும் இடர் உறத் திரிந்த மேனியான். |
ஓவரு - நீக்குதற்கு அரிய; பூவரு சாலை - மலர்கள் மலரும் (இலைக்) குடில்; நோக்குறா - பார்த்து. 24-1 |