முகப்பு
தொடக்கம்
298.
'சந்திரன், இரவி
என்பவர்கள்தாம், அவன்
சிந்தனை வழி நிலை
திரிவர்; தேசுடை
இந்திரன் முதலிய அமரர்,
ஈண்டு, அவன்
கந்து அடு
கோயிலின் காவலாளரே.
தேசு -
ஒளி;
கந்து அடு கோயில் -
கட்டுத்தறிகளை முறிக்கும்
(களிறுகள் காவல் காக்கும்) அரண்மனை. 43-2
மேல்