299. என்றனள்; அபயம், புட்காள்!
     விலங்குகாள்! இராமன் தேவி,
வென்றி கொள் சனகன் பேதை,
     விதியினால் அரக்கன் தேர்மேல்
தென் திசை சிறைபோகின்றேன்;
     சீதை என் பெயரும் என்றாள்;
சென்று அது சடாயு வேந்தன்
     செவியிடை உற்றது அன்றே.

    புட்காள் - பறவைகளே; பேதை - பெண்.               43-2