3073. | மூவகை உலகினும் முதல்வர் முந்தையோர், ஓவலர் உதவிய பரிசின் ஓங்கல்போல், தேவரும் அவுணரும் முதலினோர், திசை தூவிய நறு மலர்க் குப்பை துன்னவே. |
மூவகை உலகினும் - மூன்று உலகங்களிலும்; முதல்வர் - தலைவர்களாக உள்ளவர்கள்; முந்தையோர் - முற்பட்டு வந்தவர்களாய்; ஓவலர் உதவிய - ஓய்வின்றிக் கொண்டு வந்து தந்த; பரிசின் ஓங்கல் போல் - காணிக்கைகளின் குவியல் போல; தேவரும் அவுணரும் முதலினோர் - தேவர், அசுரர் முதலியவர்கள்; திசை தூவிய - அனைத்துத் திசைகளிலிருந்தும் சொரிந்த; நறுமலர்க் குப்பை - மணமலர்க் குவியல்கள்; துன்ன - நிறைந்திருக்கவும்...(ஏ - அசை). இராவணன் மேற் சொரிந்த மலர் மழைக்கு அவன் முன் வைத்த பொன் மலர்க் குவியலை உவமை கூறினார். 7 |