3076. அன்னவன் அமைச்சரை நோக்கி,
     ஆண்டு ஒரு
நல் மொழி பகரினும்
     நடுங்கும் சிந்தையர்,
'என்னைகொல் பணி?'
     என இறைஞ்சுகின்றனர்.
கின்னரர், பெரும்
    பயம் கிடந்த நெஞ்சினர்.

    அன்னவன் - இராவணன்; அமைச்சரை நோக்கி - தன்
அமைச்சர்களைப் பார்த்து; ஆண்டு - அவ்விடத்தில்; ஒரு நல்மொழி
பகரினும் -
ஒரு நல்ல சொல்லைப் பேசிடினும்; நடுங்கும் சிந்தையர் -
(தங்களைத் தண்டிக்கும்படி உரைத்ததாக எண்ணி) அஞ்சும்
மனத்தவர்களாய்; பெரும் பயம் கிடந்த நெஞ்சினர் - மிகுந்த பயம்
செறிந்த உள்ளத்தவர்களாய்; பணி என்னை கொல் என - கட்டளை
யாதோ என்று; கின்னரர் - கின்னர வேந்தர்; இறைஞ்சுகின்றனர் -
வணங்கி நிற்கவும்....

     கின்னரர் - கின்னரம் என்னும் இசைக் கருவி வாசிக்கும் தேவ
இனத்தவர்.                                                  10