3083. | சூலமே முதலிய துறந்து, சுற்றிய சேலையால் செறிய வாய் புதைத்த செங்கையன், தோலுடை நெடும் பணை துவைக்குந்தோறு எலாம், காலன் நின்று, இசைக்கும் நாள் கடிகை கூறவே, |
சூலமே முதலிய துறந்து - (தனக்கு உரிய) சூலம் முதலிய படைக்கலங்கள் நீத்து; சுற்றிய சேலையால் செறிய வாய் புதைத்த - சுற்றிய ஆடைத் தலைப்பால் இறுக்கமாக வாயையும் மறைத்து; காலன் - காலத்தை அறியும் கடவுளாகிய எமன்; செங்கையன் - சிவந்த கரங்கள் படைத்தவனாய்; தோலுடை நெடும் பணை - தோல் போர்த்த பெரிய பேரிகைகளை; துவைக்கும் தோறு எலாம் - அடிக்கப்படும் நேரங்களில் எல்லாம்; நின்று - வந்து நின்று; இசைக்கும் நாள் கடிகை கூற - கூறத்தக்க நாளின் நாழிகைக் கணக்கை எடுத்துரைக்கவும்....(ஏ - அசை). அனைவரையும் நடுங்க வைக்கும் எமன் பட்டபாடு உரைக்கப்பட்டது. 17 |