3084. நயம் கிளர் நான நெய்
     அளாவி, நந்தல் இல்
வியன் கருப்பூரம் மென்
     பஞ்சின் மீக்கொளீஇ,
கயங்களில் மரை மலர்க்
     காடு பூத்தென,
வயங்கு எரிக் கடவுளும்,
     விளக்கம் மாட்டவே.

    வயங்கு எரிக் கடவுளும் - விளங்குகின்ற அக்கினி தேவனும்; நயம்
கிளர் நானநெய் அளாவி -
நலம் மிக்க நறுமண நெய்யை (அகலில்)
சொரிந்து; வியன் கருப்பூரம் - சிறந்த கற்பூரத்தை; மென் பஞ்சின்
மீக்கொளீஇ -
மெல்லிய பஞ்சுத் திரியின் மேல் வைத்துப் பற்றும் படி
செய்து; கயங்களில் - குளங்களில்; மரைமலர்க் காடு பூத்தென - சிவந்த
தாமரைப் பூக்கள் பூத்தாற் போல; நந்தலில் விளக்கம் மாட்ட -
அணைதலில்லாத விளக்குகளை ஏற்றவும்....(ஏ - அசை).

     இராவணனுக்கு அங்கியங் கடவுள் விளக்கேற்றும் பணி செய்தமை
கூறப்பட்டது.                                                18