3087. | கங்கையே முதலிய கடவுட் கன்னியர் கொங்கைகள் சுமந்து இடை கொடியின் ஒல்கிட, செங் கையில் அரிசியும் மலரும் சிந்தினர், மங்கல முறை மொழி கூறி, வாழ்த்தவே, |
கங்கையே முதலிய - கங்கை தொடங்கியமைந்த; கடவுட் கன்னியர்- (புண்ணிய தீர்த்தங்களாகிற) தெய்வப் பெண்கள்; கொங்கைகள் சுமந்து - பருத்த தனங்கள் தாங்கிய; இடைகொடியின் ஒல்கிட - தம் இடை கொடி போல் துவள நின்று; செங்கையில் அரிசியும் மலரும் சிந்தினர் - சிவந்த கைகளில் ஏந்திய மங்கல அரிசியையும் மலர்களையும் (இராவணன் மேல்) தூவினராகி; முறை - வரிசையாக; மங்கல மொழி கூறி வாழ்த்த - மங்கல மொழிகள் கூறி வாழ்த்தவும்......(ஏ - அசை).21 |