3093. | பொருக்கென நோக்கினர், புகல்வது ஓர்கிலர், அரக்கரும் இரைத்தனர்; அசனி ஆம் எனக் கரத்தொடு கரங்களைப் புடைத்து, கண்களில் நெருப்பு எழ விழித்து, வாய் மடித்து, நிற்கின்றார். |
அரக்கரும் - இராக்கதர்களும்; பொருக்கென நோக்கினர் - (சூர்ப்பணகையைத்) திடீரென்று பார்த்தவர்களாய்; புகல்வது ஓர்கிலர் - இன்னது கூறுவதென அறியாது; அசனி ஆம் என இரைத்தனர் - இடி முழக்கம் போலக் கதறி ஒலி செய்து; கரத்தொடு கரங்களைப் புடைத்து - கைகளோடு கைகளை அறைந்து கொண்டு; கண்களில் நெருப்பு எழ விழித்து - கண்களில் நெருப்புப் பொறி பறக்க விழித்துப் பார்த்து; வாய் மடித்து நிற்கின்றார் - உதட்டைக் கடித்துக் கொண்டு நின்றார்கள். 27 |