3094. | 'இந்திரன் மேலதோ? உலகம் ஈன்ற பேர் அந்தணன் மேலதோ? ஆழி யானதோ? சந்திர மௌலிபால் தங்குமே கொலோ, அந்தரம்?' என்று நின்று அழல்கின்றார் சிலர். |
சிலர் - அரக்கர் சிலர்; அந்தரம் - தீமையானது; இந்திரன் மேலதோ - தேவேந்திரன் மீதில் அமையுமோ?; உலகம் ஈன்ற பேர் அந்தணன் மேலதோ - உலகைப் படைத்த பிரமன்மீதில் அமையுமோ?; ஆழியானதோ - சக்கரப்படை கொண்ட திருமால் மீதில் அமையுமோ?; சந்திர மௌலிபால் தங்குமே கொலோ - சந்திரனை முடியில் தரித்த சிவனிடத்தில் தங்கி அமையுமோ?; என்று நின்று அழல்கின்றார் - என்று சொல்லி நின்று மனக் கொதிப்புற்றார்கள். சந்திரமௌலி - வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஆழியான் என்னும் சொற்கு பாற் கடலிடத்தான் என்றும் நீலக்கடல் போலும் மேனியான் என்றும் பொருள் கூறலாம். 28 |