3100. | 'இனி ஒரு கற்பம் உண்டுஎன்னின் அன்றியே, வனை கழல் வயங்கு வாள் வீரர் வல்லரோ? பனி வரும் கானிடைப் பழிப்பு இல் நோன்புடை முனிவரர் வெகுளியின் முடிபு' என்றார் சிலர். |
இனி ஒரு கற்பம் உண்டு என்னின் அன்றியே - இனி வேறொரு ஊழிக்காலம் உண்டானால் அன்றி; வனை கழல் வயங்கு வாள் - புனைந்த வீரக் கழலையும், விளங்கும் வாளையும் உடைய; வீரர் வல்லரோ? - (இந்நாளில் வாழும்) வீரர் இச் செயல் செய்ய வல்லமை உடையவர்களோ? (இலர்); (ஆதலால்); பனி வரும் கானிடை - அச்சம் உண்டாகும் காட்டில்; பழிப்பில் நோன்புடை முனிவரர் - குற்றமற்ற தவம்செய்யும் தவசிகள் கொண்ட; வெகுளியின் முடிபு - சினத்தின் விளைவேயாகும்; என்றார் சிலர் - என்று சிலர் கூறினார்கள். கற்பம் - ஊழிக்காலம்; 34 |