3104. | நாந்தக உழவர்மேல் நாடும் தண்டத்தர், காந்திய மனத்தினர், புலவி கைம்மிகச் சேந்த கண் அதிகமும் சிவந்து நீர் உக, வேந்தனுக்கு இளையவள் தாளில் வீழ்ந்தனர். |
(வேறு சில பெண்கள்); நாந்தக உழவர் மேல் - வாள் உழவரான தம் கணவர்மேல்; நாடும் தண்டத்தர் - (ஊடல் காரணமாக) தண்டனை தர விரும்பியவர்களாய்; காந்திய மனத்தினர் - எரியும் நெஞ்சினராய்; புலவி கைம்மிக - ஊடல் மிகக் கொண்டு; சேந்த கண், - சினத்தால் சிவந்த கண்கள்; அதிகமும் சிவந்து நீர் உக - (இப்போது சூர்ப்பணகையைக் கண்டு) மேலும் கலங்கிச் சிவந்து கண்ணீர் சிந்த; வேந்தனுக்கு இளையவள் - இராவணன் தங்கையின்; தாளில் வீழ்ந்தனர் - பாதங்களில் வீழ்ந்தனர். 38 |