3106. | எழு என, மலை என, எழுந்த தோள்களைத் தழுவிய வளைத் தளிர் நெகிழ, தாமரை முழு முகத்து இரு கயல் முத்தின் ஆலிகள் பொழிதர, சிலர் உளம் பொருமி விம்முவார். |
சிலர் - வேறு சில பெண்கள்; எழு என - தூண் போன்ற; மலை என - குன்று போன்ற; எழுந்த தோள்களை - (தம் நாயகரின்) உயர்ந்த தோள்களை; தழுவிய வளைத் தளிர் நெகிழ - அணைத்திருந்த தளிர் போன்ற வளையணிந்த கரங்கள் நெகிழ்ச்சியடையவும்; தாமரை முழு முகத்து - தாமரை போன்ற எழில் மிக்க முகத்திலுள்ள; இரு கயல் - கயல்மீன் போன்ற இரு கண்களிலும்; முத்தின் ஆலிகள் பொழிதர - முத்துப் போன்ற கண்ணீர்த் துளிகள் சிந்தவும்; உளம் பொருமி விம்முவார் - மனம் விம்மி அழத் தொடங்கினார்கள். தழுவிய கணவரையும் நெகிழவிட்டு அழுத பெண்களின் செயலைக் கூறினார். 40 |