3138. | 'தெவ் உலகத்தும் காண்டி; சிரத்தினில் பணத்தினோர்கள் அவ் உலகத்தும் காண்டி; அலை கடல் உலகில் காண்டி; வெவ் உலை உற்ற வேலை, வாளினை, வென்ற கண்ணாள் எவ் உலகத்தாள்? அங்கம் யாவர்க்கும் எழுத ஒணாதால்! |
வெவ் உலை உற்ற வேலை, வாளினை - வெப்பம் மிகுந்த கொல்லர் உலையில் உருவாக்கப்பட்ட வேல், வாள் முதலியவற்றைக் (கூர்மையால்); வென்ற கண்ணாள் - வெற்றி கொண்ட கண்களை உடையவள் (சீதை) ; எவ்வுலகத்தாள்? - எந்த உலகைச் சார்ந்தவளோ (அறியேன்); அங்கம் யாவர்க்கும் எழுத ஒணாதால் - சித்திரத்தில் கூட யாராலும் இத்தகைய அழகு வடிவம் தீட்ட முடியாத சிறப்புடையாள்; தெவ் உலகத்தும் காண்டி - (இவளைப் போன்ற அழகுடையார் உண்டா என்று) பகைவர் உலகங்களிலும் தேடிக் காண்பாயாக; சிரத்தினில் பணத்தினோர்கள் அவ்வுலகத்தும் காண்டி - தலைகளில் படமேந்திய நாகர் உலகத்தும் தேடிக் காண்பாயாக; அலை கடல் உலகில் காண்டி - கடல் சூழ்ந்த பூவுலகிலும் தேடிக் காண்பாயாக. (எங்கும் இவளை ஒப்பாரைக் காணமாட்டாய்) இராவணன் ஆணை செல்ல வல்ல எவ்வுலகத்தும் இவளை நிகர்த்த அழகுடையார் இல்லை என்பதாம். 72 |