3184. நாணிநின்று ஒளி மழுங்கி, நடுங்காநின்ற
     உடம்பினன் ஆய்,
சேணில்நின்று புறம் சாய்ந்து,
     கங்குல்-தாரம் பின்செல்ல,
பூணின் வெய்யோன் ஒரு திசையே புகுதப்
     போவான், புகழ் வேந்தர்
ஆணை செல்ல, நிலை அழிந்த அரசர்
     போன்றான்-அல் ஆண்டான்.

    பூணின் வெய்யோன் - உலகுக்கு அணியான கதிரவன் ஒரு
திசையே புகுத -
ஒரு வழியில் வந்து புகவும்; அல் ஆண்டான் -
இரவின் ஆட்சித் தலைவனாகிய சந்திரன்; நாணி நின்று - வெட்கமுற்று;
ஒளி மழுங்கி - ஒளி குன்றியவனாய்; நடுங்கா நின்ற உடம்பினன் ஆய்
-
நடுக்கம் மேவிய உடலோடு; சேணில் நின்று - தொலை தூரம் அகன்று;
புறம் சாய்ந்து - முதுகுகாட்டிச் சென்று; கங்குல் தாரம் பின் செல்ல -
இரவாகிய மனைவி உடன் செல்ல; போவான் - நீங்கிச் சென்றான்; புகழ்
வேந்தர் -
பெருமை மிக்க பேரரசர்; ஆணை செல்ல - கட்டளை
பிறப்பிக்க; நிலை அழிந்த - தம் நிலை தடுமாறிய; அரசர் போன்றான் -
சிற்றரசர் போலக் காட்சி தந்தான்.

     அகலும் சந்திரன் தோல்வியுற்ற அரசர் போன்றிருந்தான். உவமை
அணி.

     அல்லாண்டான் - இரவின் நாயகன்.                        118